பக்கம் பக்கமாய்
கவிதைகள் எழுதி தயாரான பின்னும்
உன் பக்கத்தில்
நான் வெறும் காகிதமாய்த்தான் நிற்கிறேன்……….


நீ விரும்புகிறவர் பட்டியலில்
இல்லாத போதும்
சந்தோஷம் எனக்கு
உன்னை விரும்புகிறவர் பட்டியலில் இருப்பதால்

மறுஜென்மத்தில் நீ என் அன்பை

மறந்தாலும் ஞாபகப்படுத்தவே,

நீ கண்மூடியபிறகு

நான் கட்டிவைத்தேன் தாஜ்மஹாலை


காகிதத்தைக் கூட
எறும்புகள் மொய்க்கும்
அதில் எழுதியிருப்பது
உன்னைப்பற்றி என்றால்………………


உன்னைப் படைத்த பிரம்மன்
உன் மிச்சத்தை
என்னிடம் கொடுத்து அனுப்பியிருக்கிறான்
உன்னை இன்னும் அழகாக்க………
சிலையை செதுக்கும் போது
சிலையின் வலியை
சிற்பியே ஏற்றுக்கொண்டது போல் இருக்கிறது,
உன் அழகை என் பார்வையால்
இன்னும் அழகாக செதுக்கும் போது…

நான் நானாகவே இருந்தேன்
உன்னைக் காணாதவரையில்……………..

அழகு


வானில் வண்ணங்களைச் சுமப்பதால்
வானவில் அழகானது,
மண்ணில் உன்
எண்ணங்களைச் சுமப்பதால்
நானும் அழகானேன்…..

ஒருதலை…..


என் இதயத்தை
தொலைத்த போது
இல்லாத வலி
இன்று நீ
திருப்பிக் கொடுத்தபோது…….

முதல் பார்வை


உன் கண்களின் பார்வையில்
என் முகவரியைத் தொலைத்துவிட்ட நான்
அதை உன் பாதச் சுவடுகளில்
திரும்பப் பெற்றேன்………

உன் நினைவுகள்


உனை எண்ணி முடிகையில்
அநேகமாய்
வானத்தின் எல்லையில்
நின்றிருப்பேன் நான்………………..

Advertisementsகாதல் பூதமே காதல் பூதமே
என்மேல் ஏன் உனக்கு கோபமே


இதயம் கிழித்தெடுத்து கண்கள் கொத்தித் தின்று
உயிரை உருகவிட்டுப் போகிறாய்
மீதம் இருக்கும் நானும் கூட
அவளை நினைக்கத்தான் என்கிறாய்

வேண்டாம் போய்விடு வேண்டாம் போய்விடு
காதல் பூதமே போய்விடு

இறுதிவரைக்கும் இதயம் இணைந்திருக்கும்
நட்பைப் போல உன் காதல் இல்லையே
கண்ணீரில் நனையவைக்கும் கவலையில் மூழ்கடிக்கும்
உன் காதல்படு தொல்லையே

வேண்டாம் போய்விடு வேண்டாம் போய்விடு
காதல் பூதமே போய்விடு


உன்னை வர்ணிக்க
வார்த்தைகள் இல்லாத போதும்
உன்னைப் பற்றி கவிதைகள்
எழுத துடிக்கிறது என் மனது……………………

நாவலின் கடைசி
பக்கத்தைப் படிக்கும் ஆவல் எனக்கு,
உன் ஒவ்வொரு பக்கத்தை
படிக்கும் போதும்……..


நான் பக்கத்தில் நிற்கும் போது,
வெட்கத்தில் நனைகிறது ஒரு நிலா!

 

ஜில்லென்று ஒரு மழைக் காலம்அடைமழைக் காலத்தில்
உன் உடை தேகம் நனையாமலிருக்க
ஒரு குடையுடன் காத்திருக்கிறேன் நான்!

நீவரும் வரை என் கால் நனைத்துப் போகும்
செம்மண் மழைநீரை பார்த்திருக்கிறேன்!

சாலையின் இடையில் உள்ள
ஒரு வளைவில் இருந்து நீ
என் காட்சிக்கு புலப்படத் தொடங்குகிறாய்!

மழையை ரசித்து வரும் நீ,
எனைப் பார்த்ததும் வெட்கம் காட்டி
தலை குனிகிறாய்!
தரையில் மழைநீர் உன் முகம் காட்டுகிறது!

உனக்கும் எனக்கும் இடையில்
முன்பு நூறு மழைத் துளிகள் விழுந்தன!
அது பத்தாகக் குறையும் போது
நீ என் அருகில் நிற்கிறாய்!

என் கைகளில் உள்ள குடையை
உன்னிடம் தர முற்படுகையில்
நீ வானம் பார்த்து சிரிக்கிறாய்!

இப்போது மழை நின்று
இலேசான தூறல் மட்டுமே தொடர்கிறது!
குடைக் கம்பிகளை நான் மடிக்க
அது மழைநீரை கண்ணீராய் வடிக்கிறது!


நீ எனைத் தாண்டி முன் செல்கிறாய்
நான் உன்னை பின் தொடர்கிறேன்!
நீ நடக்கும் போது
உன் பாதங்கள் மழைநீரை பிரிக்கின்றன,
அவை இணையும் முன்
என் பாதங்கள் மீண்டும் பிரிக்கின்றன!

நான்கு பாதங்க்ள் மண்ணில் செயல்பட்டாலும்,
இரண்டு காலடி ஓசைகளே கேட்கின்றன!
சந்தேகத்தொடு நீ திரும்புகையில்,
நான் சந்தோசத்தோடு உன் முகம் பார்க்கிறேன்!

வழியில் பள்ளிச் சிறுவர்கள்
வானவில்லைக் கண்டு பரவசம் அடைகின்றனர்,
கூடவே நீயும்…
ஆனால் உன் சந்தோசத்தில்
நான் ஆயிரம் வானவில்களை பார்ப்ப்தறியாமல்……..

உன் வீடிருக்கும் தெரு வந்ததும்
நீ என்னைத் திரும்பிப் பார்க்கிறாய்!
சிவப்பு விளக்கு விழுந்த இரயில் பாதையென
என் அன்றைய காதல் பயணம் முடிவடைகிறது!

உன் பிரிவுக்கு வருந்திக் கொண்டே
என் வீட்டிற்கு திரும்புகையில்,
வானில் ஒரு வானவில்
மீண்டும் உன்னை நினைவூட்டுகிறது!

 aaaaaaaaaaaaaaaa.jpg

சித்திரை மாதத்து நண்பகலோடு
பயணித்துக் கொண்டிருந்தது பேருந்து,
சித்திரை பௌர்ணமியாய்
உன்னையும் ஏற்றிக் கொண்டு…………
நிலவை சுற்றும் பூமியாய்,
நான் உன்னை என் எண்ண்ங்களால்
சுற்றிக் கொண்டிருந்தேன்
கோடைக் காலத்தில் சாரலாய்
காற்றில் இசை மழையை
தூவிக் கொண்டிருந்தது வானொலி

நீ பார்க்காத போது நானும்
நான் பார்க்காத போது நீயும்
மாறி மாறி பார்த்துக் கொண்டோம்

நாம் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும்
நீ முன் படிக்கட்டுகளில் கீழிறங்கினாய்!
நான் உன்னைப் பார்த்து கொண்டே
பின் படிக்கட்டுகளின் வழியே கீழிறங்குகையில்,

“அவள் எப்போது மீண்டும் வருவாள்”
என மெல்லிய குரலில் என்னிடம் கேட்டது பேருந்து…………
நான் வரும்பொதுதான் அவளும் வருவாள்
என்றேன் நான் பேருந்தைப் பார்த்து
புன்னைகைத்த படியே…………….

அதை கேட்டதும்
என்னைப் பார்த்து முறைத்தபடியே
நகர்ந்தது பேருந்து………………………………..

Newer entries »