கண்கள்தான் காதலின் ஆயுதமோ!

கண்ணீர்தான் என்றும் அதன் பூரணமோ!

Advertisements

பிழையொன்று இல்லாத போதும்,

பிறையின்றி வானம்  ஓர்நாள் வாடும்!

அதுபோலத்தானோ நம் பிரிவும்……

உன் அசைவற்ற

புகைப்படம் கூட

என்னை எந்த அசைவுமற்று

பார்க்கச் செய்கிறது………..

உன் உடைந்த வளையல்களை
சேகரித்துதான்
மழைநாளில் அந்த வானம்
வானவில் காட்டுகிறதோ……….

உன்னைக் காண்பதை
நான் எனக்குள் திருவிழாவெனக்
கொண்டாடுகிறேன்,
அந்த திருவிழாவில்
என்னை நானே
தொலைத்தும் விடுகிறேன்…….

நீ என்னிடம் திருடிய இதயத்தை
எங்கே ஒளித்து வைத்திருப்பாய்
எனத் தெரியவில்லை!
ஆனால் அது நிச்சயம்
பல நூறு இதயங்களோடுதான்
அடைபட்டிருக்கும்………………

ஜன்னலோரம் வீசும் குளிர் தென்றல்,
பூக்கடையில் சிரிக்கும் வண்ணமயமான பூக்கள்,
மதிய நேரத்து மழைத் தூரல்,
வானொலி காற்றில் இரையும் மென்பாடல்
அத்தனையும் விட அழகாய் இருந்தது
பக்கத்தில் அமர்ந்திருந்த உன் சிரிப்பு………………

ஓட்டுத்துளை வழியே சொட்டு சொட்டாய் இறங்கி,
அது விழும் இடத்தில் வைத்த
பாத்திரத்தையும் அடிக்கடி நிரப்பி,
வேலைக்கு போய் வந்த அம்மாவின்
உறக்கத்தை கெடுப்பதற்கு முன்பு வரை
பிடித்துதானிருந்தது மழையும் …………….

சிறுவயதில் கிணற்றுக்குள் தவறி விழுந்து

 குரலெழுப்ப முடியாமல் குற்றுயிராய் உயிர்பிழைத்த போதும்,

பள்ளியில் புதிதாய் வந்த ஆசிரியர்

என்னை வகுப்பில் வாழ்த்து பாடச் சொல்ல,

வகுப்பில் அனைவரும் சிரித்து நான் அழுத போதும் ,

பெண் பார்க்கும் நிகழ்வில் வாய் ஊனத்திற்கு

தனியாய் மாபிள்ளை வீட்ட்டார்

வரதட்சணைகேட்ட போதும்


இல்லாத வலி இப்போது

அழுகின்ற குழந்தைக்கு

தாலாட்டு பாட முடியாததால் ஏற்படுகிறது

 

முன்பொருநாள் நான்
தேடித்தேடி வாங்கிய பூந்தொட்டிகளும்
பார்த்து பார்த்து அமைத்த பூந்தோட்டமும்
இன்று நான் கவனிக்காத போதும்
பூத்துக் குலுங்குகின்றன
நான் விதவையென்பதை கவனிக்காதபடி

சுதந்திர தினத்தன்று
சமாதான புறாக்களை
பறக்க விட்டுவிட்டு
ஏவுகணைகளின் அணிவகுப்பையும்
ஏற்றுக்கொள்கிறார்
குடியரசுத் தலைவர்

 

நான் உன் வளையைகளுக்குள்
புகுந்துவிடும்படி
எங்கனம் ஆனேன்?
நீ என் கனவுகளில்
வளைய வந்ததினால்தானே!

 

pookkal

முன்பொருநாள் நான்

 தேடித்தேடி வாங்கிய பூந்தொட்டிகளும்

பார்த்து பார்த்து அமைத்த பூந்தோட்டமும்

இன்று நான் கவனிக்காத போதும்

பூத்துக் குலுங்குகின்றன

நான் விதவையென்பதை கவனிக்காதபடி


நியூட்டனின் ஈர்ப்பு விசை
ஆப்பிளில் தொடங்கியது,
உன் விழி ஈர்ப்பு விசையோ
ஆதாம் ஆப்பிளில் முடிகிறது……….


உன் பாதச் சுவடுகளை

பார்த்த பின்புதான் அறிந்தேன்,

உனக்கு கால்களாலும்

கோலம் போடத் தெரியுமென்று………..

« Older entries